ஐப்பஸியில் மாந்தோப்புபுகளின் மேல் சாய்ந்திறங்கும் மழைத்திரை
எங்கோ பொழிய சரசரவென வீரைந்தேகும் மேகக்கூ ட்டம்
மார்கழி வி டிவேளை திரள் பனிபடலம் .
மண்தரையில் பாம்பு ஊர்ந்த வரிப்பதிவுகள் .
மடத்து அரச மரத்தடியில் குடில்விட்டு நாளுக்குநாள் உயரும் புற்று .
வெளிவிட்டு அல்லது உள்வாங்க மருத்த தடைபட்ட உயிர் மூச்சு .
கிணற்றில் நாளிரவில் கவியிருளில் தன ஆழத்தை பால் வடிவில் மறைத்து நல்லுங்காது
நிற்கும் ஜலமட்டம் .
மாவிலைகள் மறைக்க அவை நடுவில் தொங்கும் மாவடு .
நீல வெளியில் சிறகு விரித்து நீந்தும் பருந்தின் வட்டம் .
நாள் கிழைமைகளில் துருவாமனைஅடியில் தும்பை என போர் குவியும்
தேங்காய்த்துருவல் .
எழுதிய படம் போல பசும் புற்றரை .
பறக்கும் கொக்கின் சிறகடியிநின்று புல் தரை மேல் உதிர்த்து பள்ளீரிடும் வெள்ளைஇறகு .
சீறி இறங்கும் விண்மீனின் வீழ்ச்சி .
கை தவறி கீழே விழுந்து குதித்தேழும்
வெள்ளியின் இனித்த மெல்லோசை .

கருபுரளும் பசுவின் பெருவயறு .
கும்மட்டியின் நடு குழிவில் தேங்கி கன கன க்கும் குங்கும பிழம்பு
கோடையில் நடுங்கும் கானல் .
சமயம் கரணம் தாண்டி ஒழுங்கை உள்ளிநின்று கிளம்பி கூடம் முழுவதும் குபீரிடும் தாழம்பூவின் தாழ்ந்த மணம்.
லா.சா.ரா ஒரு ஹைக்கு மன்னன் .இதற்கு ஈடாக என்னத்தை சொல்வது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக