பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

ரவீந்தரனுக்கு வந்த கடிதம்

ரவீந்தரனுக்கு வந்த கடிதம்

எனக்கு மிதமான எதிர்ப்பெல்லாம் காட்ட தெரியாது .காட்டாறு  தான் என்னுள்ளில் ஓடிக்கொண்டு இருக்கிறது .அந்த காட்டாறுக்கு  நான் என்னை ஆட்படுதிவிட்டேன் .என்னுடைய 20 வருட வாசிப்பிற்கு  இது   என்னக்கு நரம்புகளில் முறுக்கி விட்டுருக்கும் எதார்த்தம் .

வார்த்தைகளில் கூட  நறுக் நறுக் தான் .லா .சா .ரா  என்னை நிறைய பாதித்து  மாற்றி இருக்கிறார் .சுகபோகதீவுகள்  என்னக்கு வெகு தூரம் .உண்மையை  மறைக்கும் குரூ ரத்தின் மீது வேட்டை நாயின்  பாய்ச்சல்  தான் என் பாய்ச்சல் .

தினத்தந்தியின் கடைசி பக்கங்களில் வரும் கவிதைகளை யாரும் படிப்பதில்லை .அதை படிப்பவனும்  எழுதுபவனும் புலவர்கல்ல .ஆனால்  அவைகள் பயிற்சி யும்  அல்ல .ஆனாலும் 
அது சிந்துபாத் கதை போல் வந்து கொண்டேயிருக்கிறது ,அது  தொடர்ந்து வந்துகொண்டிருப்பது 
அதன் வெற்றி  என்று நம்மால் சொல்லி விட முடியாது  அதுதான் காலம் .அதை போல்தான் 
எதுவும் நம்மால் நிராகரிக்க முடியாமல் நம்மேல் புரண்டு கொண்டிருக்கும் என்று நான் 
உணர்ந்தே இருக்கிறேன் .