பிரபலமான இடுகைகள்

வியாழன், 14 ஏப்ரல், 2011

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி ஒரு கதைக்காரர் அல்ல .எழுதுவதற்கும் கதையை மனதில் சொல்லி பர்ர்த்து 
கிடையாது .ஆனால்  கத்தி போன்று வீரிய விமர்சகர் .அப்பிப்ரயங்களை நிர்தட்சன்யமாக 
சொல்லி விடுபவர் .தன ஒரு கதைக்கரரக வேண்டும் என்று முயற்சிக்குமேல் முயற்சி 
செய்து பர்ர்தவர் .அவரின் பாஷைகள் அவரின் நியாயங்களை சூல் கொண்டு வருபவை. 
அந்த நியாயங்கள் .நமக்கு வேண்டிய நியாயங்கள் என்பதால் அவரின் பாஷை இலகுவாகிறது .
எழுத்தோட்டம்  நம்மைப்பற்றி கொள்கிறது .முதலில் வாழ வேண்டும்  பின் வாழ்ந்ததை சொல்ல 
வேண்டும் .இதை முன் பின்னாக வெல்லலாம் மாற்ற முடியாது .புளியமரம்  ஒரு ஹீரோ அல்ல .
அதை சுற்றி நடப்பவை நாவலுக்குண்டன அவலங்கள் இல்லை. ஓய்வாக படித்தால் அதன் தாக்கம் 
மனதை பிரண்டுவதும் அல்ல .ஆனால்  அதை கோர்வையாக்கி நாவலக்கினர் .-ஜே.ஜே  ஒரு தந்திரம் .அதன் கனம் மனதில் நெடு நாள் வைதிருந்ததின் கனம் தாங்காமல் போனதாலும் 
வித்யைகள் அடுத்தவனை     சென்றடய  வேண்டும் என்பதெல்லாம் திட்டங்கள் இல்லை .ஆ கவே எல்லாம்  யதார்த்தமாகி விடுகிறது 


 

வெள்ளி, 11 மார்ச், 2011

new

http://dhalavaisundaram.blogspot.com

லா.சா.ரா

லா.சா.ரா 

ஐப்பஸியில் மாந்தோப்புபுகளின் மேல் சாய்ந்திறங்கும்  மழைத்திரை 
எங்கோ பொழிய சரசரவென வீரைந்தேகும் மேகக்கூ ட்டம் 
மார்கழி வி டிவேளை திரள் பனிபடலம் .
மண்தரையில் பாம்பு ஊர்ந்த வரிப்பதிவுகள் .
மடத்து அரச மரத்தடியில் குடில்விட்டு நாளுக்குநாள் உயரும் புற்று .
வெளிவிட்டு அல்லது உள்வாங்க மருத்த தடைபட்ட உயிர் மூச்சு .
கிணற்றில் நாளிரவில் கவியிருளில் தன ஆழத்தை பால் வடிவில் மறைத்து நல்லுங்காது
நிற்கும் ஜலமட்டம் .
மாவிலைகள் மறைக்க அவை நடுவில் தொங்கும் மாவடு .
நீல வெளியில் சிறகு விரித்து நீந்தும் பருந்தின் வட்டம் .
நாள் கிழைமைகளில் துருவாமனைஅடியில் தும்பை என போர் குவியும் 
தேங்காய்த்துருவல் .
எழுதிய படம் போல பசும் புற்றரை .
பறக்கும் கொக்கின் சிறகடியிநின்று புல் தரை மேல் உதிர்த்து பள்ளீரிடும் வெள்ளைஇறகு .
சீறி இறங்கும் விண்மீனின் வீழ்ச்சி .
கை தவறி கீழே விழுந்து குதித்தேழும்
வெள்ளியின் இனித்த மெல்லோசை .
கருபுரளும் பசுவின் பெருவயறு .
கும்மட்டியின் நடு குழிவில் தேங்கி கன கன க்கும் குங்கும பிழம்பு
கோடையில் நடுங்கும் கானல் .
சமயம் கரணம் தாண்டி ஒழுங்கை உள்ளிநின்று கிளம்பி கூடம் முழுவதும் குபீரிடும் தாழம்பூவின்  தாழ்ந்த மணம்.

 லா.சா.ரா  ஒரு ஹைக்கு மன்னன்  .இதற்கு ஈடாக என்னத்தை  சொல்வது

சனி, 26 பிப்ரவரி, 2011

க்ரிஷ்ணப்ரபுவுக்கு



ல.சா.ரா .வின்  அடையாளங்கள்  பற்றி  கிருஷ்ணபிரபு என்பவருக்கு 
வந்த கருத்துரை படித்து ரசித்தேன் . அவர் நிறைய தமிழ் நாவல் வாசிக்க
வாழ்த்து கிறேன் .அவர் எனக்கு இப்போது எனக்கு நல்ல இலக்கிய நண்பரானார்
.நிறைய இலக்கிய சந்திப்புகளை தெரியப்படுத்துவார்.





திங்கள், 21 பிப்ரவரி, 2011

எப்படியும் இந்த கதையை எழுதி விடுவேன்















அப்பாவும் நானும் தான் மளிகை கடைக்கு கிளம்புவோம் .நன் பெரிய பையன் என்பதால் தன்னுடன் அழைத்து போவதை அப்பா வழக்கமாக வைத்து கொண்டிருந்தார் .முதலில் நடேசன் வீட்டின் வாசற்படியில் நின்றுகொண்டிருக்கும் நடேசனிடம் பத்து நிமிடம் பின் பிள்ளையார் கோயிலுக்கு  அது  ஒரு ஜங்ஷன் அப்பால்பத்தர் தெருவும் கஸ்துரிபாய் தெருவும் முதலில் சந்திக்கிற இடம் அங்கு  தென்படும் காதிகரப்ட் மனஜேரிடம் பத்து நிமிடம் ,அதைத தாண்டி என் பாட்டி வீடு (எனக்கு எப்போதுமே சுவர்க்கம் )அதையும் தாண்டி என் பாட்டிஅதாவது என் அம்மாவின் அம்மா வின் வீடு அதை தாண்டி போபகும் பொது எனக்கு குறுகுறு வென்றிருக்கும் ,என் மமாமகன்   பாபு என்னசெய்து  கொண்டு இருக்கிறான் என்று ஒரு பார்வையில் பர்ர்ப்பேன் ,ஆனால் அப்பவோ விறு விறுவென்று  நகர்ந்துவிடுவார் .பின் அதை தாண்டி விறு 
விறு நடை சூரியனின் இளம் வெயில் சிரமமில்லாத ஒளியாகத்தான் அந்த தெருவில்  இருக்கும் 
கட்டிடங்களின் நிழல்கள் அது கொடுத்த தெருவின் நிசப்தம் ,தெருவில் அடுபபுஊதி நகை  வேலை 
செய்யும் பத்தர்கள் ,அரைத்துக்கொண்டிருக்கும் உளுந்து மண்டியின் சப்தங்கள் அதன் நியதிகள் 
நாங்கள் எப்போதும் அன்பான அப்பாவிகள் என்று  அறிவித்து கொண்டிரு ப்பது போல் தோன்றும் 
சேட்டு வீட்டை கடக்கும்போது சேட்டிடம் இந்தியிலே பேசி பத்து நிமிடம் இப்படி மனிதர்களுடன் 
அவர்  கொண்டிருந்த சுவாரசியம் வாழ்கை மீது கொண்ட சுவரச்யமாகதான்  இருக்கவேண்டும் .
அது தான் அவரை முன்னேற்றி கொண்டிருக்கிறது என்று கொச்சை யாக சொல்வார்.
        ஒரு சின்ன கிராசிங்கில் தர்aகாசந்தும், சொமேச்வரன்  கோயில் தெருவும் என் பாட்டி வீடு 
இருந்த கSச்துரிப்பை  தெருவில் கிராஸ் பண்ணும் ,அதை  தாண்டியும் நகை வேலைக்காரர்கள் 
இருப்பார்கள் ,பின் மனிவாத்தியார் பள்ளிக்கூடம் பின் பெரிய கடைத்தெரு ,அதில் திரும்பியவுடன் பெருமாள் கோயில் இருக்கும் .அதன் வாசலில் பலா சுளைகள் ,வாழய் பழங்கள் 
விற்றுக்கொண்டிருக்கும் .சுக்கூர் பாய் கடையில் வெற்றிலை சீவல் வாங்கிக்கொண்டு 
ராமகிரிஷ்ணம்பிள்ளை மளிகை கடையில் அடைந்து உட்ட்கருவோம்  .அப்பாவுக்கு
  speacial chair .வாங்கவேண்டிய சாமான்களை எல்லாம் சொல்லி முடித்தவுடன் பேங்க் லோன் சம்மந்தமான  விஷயங்களை பேச ஆரம்பித்து விடுவார்கள் .எனக்கு பெரீச்சம்பசம் பப்பெரில்  மடித்து  சாப்பிட கொடுப்பார்கள் .மளிகைசாமான்கள் வாங்கிகொண்டு திரும்பும்போது நான் 
சுக்கூர் பாய் கடையில் எனக்கும் தங்கைக்கும் ,தம்பிக்கும் பப்பிள்கம் வங்கி தரசொல்லி கேட்டு 
என் சட்டை பையில் போட்டுகொண்டவுடன் பரம திருப்தியாகி விடுவேன் .திரும்பும்போது 
அப்பா யாரிடம் நெடுநேரம் பேசினாலும் சகித்துகொல்வதயிருன்தது.

ஒவ்வொரு மழை காலங்களும்  சுவரஸ்யம்மாயின  .வீட்டின் கதகதப்பும் பின் அம்மாவின் 
அரவணைப்பும் ,அப்பாவின் சுகாதாரமும்அந்த    
மழை காலங்கலை  அன்நியோனியமக்கின.தோட்டத்தில் மரங்களில் விதவிதமான
காளான்கள்     ,நீர்பூச்சிகள்  ,காகித கப்பல்கள்  -நத்தைபயணங்கள் -ரேடியோ வில் ஜேசுதாசின் 
பாட்டு- உன்னிடம் மயங்குகிறேன் -உள்ளத்தால் நெருங்குகிறேன் -நீண்ட சோலோ பாட்டு 
படம் பதிலுக்கு பதில் என்று நினைக்கிறேன் .ஒரு அடி நீளமுள்ள PHILIPS RADIO தான் ஆனாலும் 
சுருதி சுத்தமாக அந்த மழை காலங்களில் அந்த பாட்டு கேட்க ரம்மியமாக இருந்தது .

     

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ரவீந்தரனுக்கு  வந்த கடிதம்
புதிய நாவல்                    

சனி, 5 பிப்ரவரி, 2011

இதானல் சகலமானவர்களுக்கும்

இதானல் சகலமானவர்களுக்கும் நன் தெரிவிப்பது என்னவென்றால் ,நான் பஷீரை படித்தேன் அவர் என் குரு  ,ஆனார் .
                                               தகழி யின்
                                              பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
                                               கள்ளுக்கடையில்
                                               படித்து மிகவம் ரசித்து ,இருக்கிறேன் ,அவர் எழுத்தளர்களின் எழுத்தாளர் ,எப்போதும் என் குரு,எவர்கள் இருவரும் என்னை ,வாழ்க்கையை மிக அன்னியமாக 
பார்க்க கற்று கொடுத்தனர்  .முழுமையாக  இவர்கள் இருவரையும் படித்தவர்கள் எழுத்தளர்கள் ஆகி விடுவர்கள்.நானும் அப்படிதான் இவர்கள் கதையின் அழுத்தம் தாங்கமுடியாமல் எவ்வளோவோ நாட்கள்  மனதில் மொனமாக  அழுது ,மனதின் இருட் குகைகளில் அறுபமாக
உலவிருக்கிறேன். மலையாளி யாக   மூலத்தை அனுபவிக்கமுடியவில்ல்யே    என்ன்றும் ஏங்கி இருக்கிறேன் .மலையளிகள் சிறு வயதிலேயே இவர்களை படித்து    வாழ்க்கையின்  குருரங்களையும் ,சிக்கல்களையும்  புரிந்து கொண்டுவிடுகிறார்கள் .
இவர்களை படித்து விட்டு என்னால் மலினமனவைகளை நினைக்க முடியவில்லை .
நேர்மையான ,நேர்த்ததியான  வாழ்க்கைக்கு இலக்கியம் வழி காட்ட தவரியயதேல்ல்லை என்ன்பது நிருபணமாகிறது .

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

எழுத்து மூலம் என்னை பாதித்தவர்

எழுத்து மூலம் என்னை பாதித்தவர் ,அவர் இறந்து போனாலும் இன்னமும்
படைப்புகள் மூலம் வாசகர்களை உருவாக்கி கொண்டுருக்கிறார்.
தெளிவான கேள்விகள் ,அனுமானங்கள் ,பகிர்வுகள்